தலவாக்கலை தேயிலைத் தோட்டத்தில் மலைப் புலியின் சடலம் மீட்பு

தலவாக்கலை தேயிலைத் தோட்டத்தில் மலைப் புலியின் சடலம் மீட்பு
தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மலைப்புலி குட்டி ஒன்றின் சடலம் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தேயிலைக் கொழுந்து பறிக்கச் சென்ற நிலையில் மலைப் புலிக்குட்டி உயிரிழந்துள்ளமை தொடர்பில் தோட்ட நிர்வாகம் நுவரெலியா வன ஜீவராசிகள் அலுவலகத்துக்கு தகவல் வழங்கியுள்ளது.
உயிரிழந்த மலைப்புலி குட்டியின் சடலத்தை நீதவான் உத்தரவின் பேரில் பிரேதப் பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
May be an image of big cat and outdoors

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.