மைத்துனருக்காக O/L பரீட்சை எழுதிய நபர் கைது!

மைத்துனருக்காக O/L பரீட்சை எழுதிய நபர் கைது!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பிரதேச பரீட்சை நிலையமொன்றி லேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தனது மைத்துனர் சார்பில் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பரீட்சார்த்தி மற்றும் அவருக்காக தோற்றிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
May be an image of jewellery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.