மடுல்சீமை -சிறிய உலக முடிவில் உயிரை பணயம் வைத்து உடலை மீட்ட இராணுவ வீரர்கள் கெளரவிப்பு !

மடுல்சீமை சிறிய உலக முடிவில் காணாமல்போன பிரபல ஊடகவியலாளருடைய உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டுக்களை தெரிவித்த இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கான நினைவுச் சின்னங்ளையும் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

அதேநேரம் இந்த பாராட்டுகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பவை எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக செயற்பட்டமைக்காகவும் ஒப்பிட முடியாத உன்னதமான அர்ப்பணிப்புக்காகவும் வழங்கப்பட்டவை என இராணுவ தளபதி தெரிவித்தார்.

அண்மையில் 11 நபர்களுடன் இணைந்து மடுல்சீமை சிறிய உலக முடிவு பகுதிக்கு சென்றிருந்த போது காணாமல் போன முப்பரிமாண வீடியோ பதிவு கலைஞரான தினுர விஜேசுந்தரவின் சடலத்தை விஷேட படை மற்றும் 112 பிரிகேட்டின் படையினர் 1200 அடி பள்ளத்தாக்கிலிருந்து உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்தனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண ஆகியோரின் வழிகாட்டுதலில் பெப்ரவரி மாதம் (07) ஞாயிற்றுக்கிழமை இந்த தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று உடல் மீட்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.