தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட மருதமுனை கமு/கமு/அல் மனார் மத்திய கல்லூரியின் உத்தியோகபூர்வ நிகழ்வு !!
மருதமுனை கமு/கமு/அல் மனார் மத்திய கல்லூரி பல்வேறு தரப்பினரினதும் மிக நீண்டகால முயற்சிகளின் பலனாக ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலை நோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த 1000 பாடசாலைகளில் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டு தேசிய பாடசாலை தரமுயர்த்தப்பட்ட மருதமுனை கமு/கமு/அல் மனார் மத்திய கல்லூரியின் உத்தியோகபூர்வ நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் பாடசாலை கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.
தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் அம்பாறை மாவட்ட பிரதம நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பாடசாலையின் தரமுயர்த்தலுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஐ. எல்.எம். மாஹீர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, உதவிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு பிரதிநிதிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய ரீதியாக நடைபெறும் தேசிய நிகழ்வின் ஒரு பகுதியாக கிழக்கில் மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலையில் சிங்கள பாடசாலை ஒன்றும், மட்டக்களப்பில் தமிழ் பாடசாலை ஒன்றும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலை வரிசையில் இந்நிகழ்வு இப்பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை