February 6, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

 காணிகள் இல்லாதோருக்கு பூநகரியில் காணிகள் வழங்கல்!  அமைச்சர் டக்ளஸ்

காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பூநகரி, ஜெயபுரம் பகுதியில்  மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 472 ஏக்கர் காணிகளே கிளிநொச்சி மாவட்ட ...

மேலும்..

இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 ஆவது குழு தென்சூடானுக்கு பயணம்

இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 ஆவது குழு தென் சூடானிலுள்ள ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது. தென் சூடானுக்குச் செல்லும் 10 ஆவது குழுவில் கட்டளை அதிகாரி லெப்டினன் ...

மேலும்..

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி மீண்டும் பொருளாதாரவீழ்ச்சி வராத நிலையை உருவாக்குவோம் அலி சப்ரி கூறுகிறார்

நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ...

மேலும்..

இந்திய அரசியல்வாதிகளுக்கு மதியுரை சேவைகளை வழங்கும் நிறுவனத்திற்கு அநுரவின் குழுவினர் விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் இரண்டாவது நாளாகிய செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் அமைந்துள்ள ஒவ்சேவ்ட் றிசேர்வ் பவுண்டேசன் உலகளாவிய சிந்தனைக் குழு மன்றத்திற்குச் சென்றார்கள். ஒவ்சேவ்ட் றிசேர்வ் பவுண்டேசன் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதிலும் தீர்மானம் மேற்கொள்வதிலும்  இந்திய அரசியல்வாதிகளுக்கும் ...

மேலும்..

ஊடகத்துறையில் 43 வருடங்கள் கடந்த புத்தளம் சனூனுக்கு மற்றுமொரு விருது!

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் முகமாக  சிநேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்று புத்தளம் கடற்படை அணிக்கும் ஏறாவூர் வை.எஸ்.எஸ் அணிக்கும் இடையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது புத்தளத்தில் கடந்த 43 ...

மேலும்..

நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்பாடசாலையில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்கள் வரவேற்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) 2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று மகிழ்விக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி. நௌபல் அலி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலை 16 ஆவது பட்டமளிப்பு 10, 11 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாகத்தில்!

  -கே.ஏ. ஹமீட் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடக ...

மேலும்..

இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை ...

மேலும்..

உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

”எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். இந்து வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் ”புதிய தொழிநுட்பத்தின் ...

மேலும்..

16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் கொக்கட்டிச்சோலையில் திறப்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு ...

மேலும்..

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ...

மேலும்..

கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக எந்த அமைச்சரவையில் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கையில் ...

மேலும்..

யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!

யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து  தமது பிரச்சனைகளைத்  தெரியப்படுத்திய சாவல்கட்டு மீனவர்கள், அதன்பின்னர்  வட மாகாண ஆளுநர் செயலகம்வரை ...

மேலும்..

வடக்கில் வறுமையால் கல்வி கேள்விக் குறி! அமைச்சர் சுசில் வேதனை

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில்' வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை ...

மேலும்..

சாதனை முயற்சியில் யாழ்.இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் ஓட்;டோ மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாள்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை ...

மேலும்..

04 உதவி அதிபர்கள் கடமைகளை சாய்ந்தமருது அல்-ஹிலாலில் ஏற்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில் நான்கு உதவி அதிபர்கள் திங்கட்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர். கே.எல்.ஏ.ஜஃபர், எம்.எச்.லாபீர், எச்.எம்.உவைஸ், திருமதி ஏ. பி.றோசன் டிப்ராஸ் ஆகியோர்களே இவ்வாறு கடமைகளைப் பொறுப்பேற்ற உதவி அதிபர்களாவர். பாடசாலையின் சார்பில் இவர்களைக் கௌரவித்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இவர்களை நியமித்த வலயக்கல்விப் ...

மேலும்..

சட்ட விரோதம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை கோரை மூடை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக  திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்குப் ...

மேலும்..

மாங்குளம் 1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தம்! மக்கள் பெரும் துன்பம்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் ...

மேலும்..

தனது புதிய கிளையை கல்முனையில் நிறுவியது அலைன்ஸ் நிதி நிறுவனம்!

  பாறுக் ஷிஹான் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான அலைன்ஸ் நிதி நிறுவனம் தனது புதிய கிளையை கல்முனை நகரில் நேற்று(செவ்வாய்க்கிழமை) திறந்துள்ளது. இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது. குறித்த திறப்பு விழாவில் பல்துறை சார்ந்த அதிதிகள் வருகை ...

மேலும்..

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்   கனடா சர்வம் அமைப்பு விசேட சந்திப்பு! கல்முனை ஆதார வைத்தியசாலையில்

( வி.ரி.சகாதேவராஜா) மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்  கனடா சர்வம் அமைப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வொன்றை நடத்தியது. கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக வைத்தியசாலையின் அத்தியட்சகர்; வைத்தியர் இரா.முரளீஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

காக்காச்சிவட்டையில் ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா!

( வி.ரி.சகாதேவராஜா) வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள காக்காச்சிவட்டைப் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட  ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா திங்கட்கிழமை நடைபெற்றது. காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் தெ.கோபி தலைமையில்  அலியார்வட்டை கண்டத்தில் முன்மாதிரி துண்டமாக  செய்கைபண்ணப்பட்ட புதிய நெல்லினமான ஏரி 378 இன் ...

மேலும்..

அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்   பிரதி அதிபராக முஹம்மட் பாஹிம் கடமையேற்பு

கே.ஏ.ஹமீட் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமுஃஅக் ஃஅல்- அர்ஹம் வித்தியாலயத்தில் ஆசிரியராக நீண்ட காலமாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவையின் தரம் -3 இற்கு பதவி உயர்வு பெற்ற எம்.எஸ். முஹம்மட் பாஹிம் அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்  பிரதி அதிபராக ...

மேலும்..

அம்பிளாந்துறை சுதந்திரம் விளையாட்டு கழகத்துக்கு 3 லட்சம் ரூபா நிதியுதவி!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக் கழக நிர்வாகிகளால் தமது விளையாட்டுக் கழகத்திற்கான பிரத்தியேக மைதானமின்மை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில். கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான ...

மேலும்..

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம்

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், ...

மேலும்..

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்ட களத்தில்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளர்களாக கடமையாற்றிய நிலையில் கல்லூரிக்கு புதிதாக வந்த ...

மேலும்..

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹூதா உமர் மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022ஃ2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் வெகு விமர்சையாக அமைப்பின் தலைவர் ஏ.பைஹான் ...

மேலும்..

முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை ஒழுங்கு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் கெருடமடு பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மணல்கந்தல், வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர். மருத்துவம் சம்பந்தமான ...

மேலும்..

வேககட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது கார்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் கடையினுல்  புகுந்தது  ஏ.35 பிரதான வீதியின் புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன்  நோக்கி பயணித்த கார் ஒன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது. மேற்படி கார், மோட்டார் சைக்கிள் ஒன்றை ...

மேலும்..