கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை; உலகச் சந்தையில் விலை உயர்வு
இந்தியாவில் அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதால், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.
இந்தியா முழுவதும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை