ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்குதல்களை தடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.