மே 9 அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழப்பு!
மே 9 அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழப்பு!
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரஹெர மாவத்தைக்கும் பேர ஏரிக்கும் இடையிலான நடைபாதையில் வைத்து குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, கலஹிதியாவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அறிக்கையின்படி, பாதிக்கப் பட்டவருக்கு தலை மற்றும் மார்பில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை