சதித் திட்டம்! தலைமறைவாகிய மகிந்தவின் புதல்வர் – வெளிச்சத்திற்கு வரவுள்ள தகவல்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் யோசித ராஜபக்சவை விசாரணை செய்தால், காலிமுகத்திடல் தாக்குதல் சதித்திட்டம் பற்றிய முழுமையான செய்திகள் தெரியவரும் என்று புலனாய்வு தரப்புக்கள் நம்புவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதியன்று காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், யோசித ராஜபக்சவின் வாக்குமூலம் முக்கியமானது என்று புலனாய்வுத்துறையை கோடிட்டு ஞாயிறு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சதித் திட்டம்! தலைமறைவாகிய மகிந்தவின் புதல்வர் - வெளிச்சத்திற்கு வரவுள்ள தகவல்கள்

இந்த நிலையில், எனினும் தாக்குதல் நடத்தப்பட்ட திங்கட் கிழமை அன்று முற்பகலில் அவர் அவசரமாக சிங்கப்பூர் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

இதேவேளை, அவர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்தாலும், அது தவறானது என்றும் உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், அவர் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சதித் திட்டம்! தலைமறைவாகிய மகிந்தவின் புதல்வர் - வெளிச்சத்திற்கு வரவுள்ள தகவல்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.