நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் காணப்படும் மருந்துகளிற்கான தட்டுப்பாடு – பலருக்கு மரணதண்டனை

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் காணப்படும் மருந்துகளிற்கான தட்டுப்பாடு – பலருக்கு மரணதண்டனை
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் விரைவில்உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசியமான மருந்துகள் இல்லாததன் காரணமாக உயிர்காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகள் பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே மருத்துவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கை 80வீதமான மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றது எனினும் நெருக்கடி காரணமாக அந்நியசெலவாணி முடிவடையும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய மருந்துகள் முடிவடைகின்ற மருத்துவகட்டமைப்பு சீர்குலையும் நிலை காணப்படுகின்றது.
வர்த்தக தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள அபேக்சா புற்றுநோய் மருத்துவமனையில் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் மருத்துவர்களும் எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்-தட்டுப்பாடுகள் பரிசோதனைகளையும் அவசரசத்திரகிசிச்சை உட்பட முக்கிய சிசிச்சைகளையும் ஒத்திவைக்கவேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோயாளர்களை பொறுத்தவரை இது மிகவும் மோசமான நிலைமை சிலநேரங்களில் காலைகளில் நாங்கள் சில சத்திரசிகிச்சைகளை செய்வோம்இபொருட்கள் இல்லாததால் திட்டமிட்ட நாட்களில் சத்திரசிகிச்சைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என மருத்துவர் ரொசான் அமரதுங்க தெரிவிக்கின்றார்.
நிலைமையில் துரிதமாக மாற்றம் ஏற்படாவிட்டால் பல நோயாளிகள் மரணதண்டனையை அனுபவிப்பார்கள் என அவர் தெரிவிக்கின்றார்.
1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது- கொவிட் சுற்றுலாத்துறையை மோசமாக பாதித்ததால் அதிகரித்த எரிபொருள் விலைகளால் பொதுமக்களை கவருவதற்கான வரிச்சலுகைகளால் விவசாயத்தை மோசமாக பாதித்த இரசாயன உரத்தடையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
180 மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என மருந்துகள் கொள்வனவுடன் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.டயலசிஸ் நோயாளிகளிற்கான ஊசிகள் உறுப்புமாற்று சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இந்தியா ஜப்பான் உட்பட உலகநாடுகள் மருந்துபொருட்களை வழங்க முன்வந்துள்ளன ஆனால் அவை வந்தடைவதற்கு நான்கு மாதங்களாகும் என சமன்ரத்நாயக்க என்ற அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.
அதேவேளை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ளவர்கள் உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரும் அச்சம்
நிலைமையின் மோசமான தன்மை பாரதூரம் குறித்து எங்களிற்கே அதிகம் தெரியும் என்பதால் நாங்கள் நோயாளிகள் மருத்துவர்களை விட அதிகம் கவலையடைந்துள்ளோம் என மருத்துவர்கள் தெரிவிக்;கின்றனர்.
பெட்ரோல் சமையல் எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்களை சுட்டிக்காட்டும் அரசமருத்துவ அதிகாரிகள்சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் நிலை இதனை விட மோசமானது என்கின்றார்.
நோயாளிகள் மருந்திற்காக வரிசையில் நின்றால் அவர்கள் உயிரிழப்பார்கள் என்கின்றார் அவர் .
இரத்தப்புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் தாய் ஒருவர் நாங்கள் மிகவும் அச்சமடைந்துள்ளோம் என தெரிவிக்கின்றார்.
முன்னர்சிகிச்சை காரணமாக எங்களிற்கு முன்னர் நம்பிக்கையிருந்தது தற்போது மிகுந்த அச்சத்தின் கீழ் வாழ்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்.
நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம்இமருந்துகள் தட்டுப்பாடு குறித்து கேள்விப்படும்போது எங்கள் எதிர்காலம் இருளில் மூழ்கின்றது எங்கள் பிள்ளையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எங்களிற்கு பணமில்லை என்கின்றார் அவர்.
இந்திய அதிகாரிகள் ஏனைய உணவுப்பொருட்களுடன் 25 தொன் மருந்துகளையும் ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.