மரம் இழுக்கும் வாகனம் குடைசாய்ந்து ஒருவர் பலி – நானுஓயா வங்கிஓயாவில் சம்பவம்

மரம் இழுக்கும் வாகனம் குடைசாய்ந்து ஒருவர் பலி – நானுஓயா வங்கிஓயாவில் சம்பவம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட நானுஓயா வங்கிஓயா தோட்டத்தில் இன்று காலை மரம் இழுப்பதற்காக வந்திருந்த வண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக் குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 வயதுடைய கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
இவ் விபத்துக்கான காரணம் ரதாலையில் இருந்து வங்கிஓயா செல்லும் பாதை கடந்த 6 மாதங்களுக்கு முன் கார்பட் இட ஆரம்பிக்கப் பட்ட போதிலும் அது தற்போது இடை நிறுத்தப்பட்டிருப்பதால் குறித்த பாதையை குன்றும் குழியுமாக விட்டுச் சென்றதால் இப் பாதையில் முறையாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இருந்த காரணத்தால் இவ் விபத்து ஏற்பட்டது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் உடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் விபத்து தொடர்பாகவும் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of tree and nature

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.