மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் – காஞ்சன விஜேசேகர

மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் ரூ.400ஐ தாண்டியுள்ளன.
எனினும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவாக தொடர்ந்து.விற்பனை செய்யப்படுகிறது.
அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.