அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை – மனுஷ நாணயக்கார
அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை – மனுஷ நாணயக்கார
மாதாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்படும் பட்சத்தில் மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது தேசிய வங்கி முறையைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு பணம் செலுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மருந்துப் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணம் அனுப்பினால் போதுமானது.
எனினும், புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தகைய நபர்களுக்கு வாகனம் இறக்குமதி செய்வதற்கான ஒப்புதல், கடன் சலுகைகள் மற்றும் பிற நன்மைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை