பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.