சில அடிப்படைத் தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றம் தவறியுள்ளது: கரு ஜெயசூரிய!

மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்த போதிலும், எடுக்க வேண்டிய சில அடிப்படைத் தீர்மானங்களை நாடாளுமன்றம் எடுக்கத் தவறியுள்ளதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் பங்களிக்காமல் இருப்பது அனைவரின் முழுமையான பொறுப்பு என சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

குறிப்பாக 2022-2024 காலப்பகுதியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய கரு ஜெயசூரிய, இது போன்ற பல பொறுப்புகள் நாடாளுமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இவ்வாறான நிலையிலும் கூட, இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வுகளை காண வேண்டிய அவசியம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது நாட்டை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமோ எந்தவொரு தீர்வையும் காண முடியாது எனவும் அனைத்து சவால்களையும் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் வெல்ல வேண்டும் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.