சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம்

பாறுக் ஷிஹான்
சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம்
இலங்கை பாடசாலை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 அணிகள் கலந்து கொண்ட சமபோஷ வெற்றிக் கிண்ணப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி(தே.பா) மாணவர்களை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (2) இடம்பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.
பிரதி, உதவி அதிபர்கள், விளையாட்டு குழு ஆசிரியர்கள்,  ஆசிரியர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்
 பொலன்நறுவை தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை கண்டி கெலிஓயா களுகம்மாண மகா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.