கிழக்கு மாகாண சதுரங்க போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம், மூன்றாம் நிலைகள் !

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிக்காக இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் கடந்த பெப்ரவரி 25, 26ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டிகளில் கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) மாகாண மட்டத்தில் 15 வயதுக்குட்பட்ட போட்டியில் 02ம் நிலையும் 17வயதுக்குட்பட்ட போட்டியில் 03ம் நிலை பெற்றதுடன் 17வயதுக்குட்பட்ட போட்டியில் (Best on Board)  – என்.எப்.எஸ்.ஆஷா, எம்.எஸ்.எப். ஷானியா அன்ஃபாவும், 13 வயதுக்குட்பட்ட போட்டியில்  (Best on Board) எச்.எஃப். ஜாஃபிய்யா ருகான், 15வயதுக்குட்பட்ட போட்டியில் (Best on Board) ஐ.எஃப்.  மரீஹா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், சதுரங்கப் போட்டிக்காக பொறுப்பு ஆசிரியையாக கடமையாற்றிய கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி நதீரா, பயிற்சியாளர் ஏ.எம்.ரகீப், எஸ்.சுதன் ஆகியோருக்கு கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.