எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே! மார்தட்டுகின்றார் பஸில்

நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வருடங்கள். ஆனால், எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை.

தேர்தல் தொடர்பில் எல்லோரிடமும் சந்தேகங்கள் எழுகின்றன. எந்தத் தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் திராணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உண்டு. எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சி வெல்வது உறுதி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.