மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சுமந்திரன் தெரிவிப்பு

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு செய்திருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆகவே, சட்டத்துக்கு இணங்க தேர்தலை நடத்துவதாக இருந்தால், மார்ச் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.