தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது.

இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு, காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் எம்.என்.விக்டர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து கருத்துரைகளும் நடைபெற்றதுடன் வீதி நாடகங்களும் நடைபெற்றன.

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி செயற்படும் வேட்பாளர்களின் பதவியை பறிக்கும் அதிகாரம் இந்த சட்டத்திற்கு உள்ளது, தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கு மாறாக செலவு செய்யும் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், பொதுமக்கள் இந்த நேரத்தில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து இதன்போது அறிறுத்தல்கள் வழங்கப்பட்டன.

தற்போது உள்ளுராட்சிமன்ற தேர்தல் காலம் என்ற காரணத்தினால் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த சட்ட மூலத்தினை சரியாக பின்பற்றுகின்றார்களா என்பதை பொதுமக்கள் கண்காணிப்பதற்காக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.