சுமந்திரனின் செருப்பை நக்கினார் சாணக்கியன்! திலீபனின் பேச்சால் சர்ச்சை

சுமந்திரனின் செருப்பை சாணக்கியன் நக்கினார் என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி. பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாக பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர். அப்படி இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது என பலவாறு சாணக்கியனை பேசினார்.

இதற்கு சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாள்களில் இருந்து ராஜபக்ஷக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதை பற்றி நான் கணக்கெடுக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும்போதே ரிலீபன் எம்.பி., சாணக்கியன் சுமந்திரனின் செருப்பை நக்குபவர் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.