பண்டிகை காலத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுமா ? – துஷார இந்துனில் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கேள்வி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலை 50 முதல் 55 கிராம் அளவாக காணப்படும் போது இந்தியாவில் இருந்து 35 முதல் 40 கிராம் நிறையுடைய முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் முன்வைத்த கேள்விக்கு வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பர்னாந்து பதிலளிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இறைச்சி, மீன், கருவாடு ஆகியவற்றின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்கள் முட்டையை அதிகமாக கொள்வனவு செய்தார்கள். சந்தையில் நிலவும் முட்டைக்கான தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் நடுத்தர மக்கள் தற்போது முட்டை கொள்வனவையும் இடை நிறுத்தியுள்ளார்கள்.

முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கையில் உற்பத்தி செய்யும் முட்டையின் நிறை 50 முதல் 55 சதவீதமாக காணப்படும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து 35 முதல் 40 வரையான கிராம் நிறையுடைய முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டை பண்டிகை காலத்தில் குறைவான விலைக்கு விநியோகிக்கப்படுமா என்பது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஊடாக அரச நிதியை மோசடி செய்யும் நிலை காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.