யாழில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் இருவர் கைது (Photo)

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வௌ;வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். சீலாப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் 4 லீற்றர் 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் 3 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருள்களுடன் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.