மாவட்ட மட்டத்தில் உதைபந்தாட்டத்தினை வளப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான போட்டிகளுக்கு வெபர் மைதானத்தை இலவசமாக வழங்க சபை அனுமதி…

(சுமன்)

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மாநகரசபை முதல்வருக்கு வழங்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மாநகரசபையின் விளையாட்டுக் குழுவினால் சபைக்கு வழங்கப்பட்ட சிபாரிசுக்கு அமைவாக மாவட்ட ரீதியான உதைபந்தாட்டத்தினை வளர்க்கும், வளப்படுத்தும் நோக்கத்துடன் மேற்படி உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான போட்டிகளுக்கு வெபர் மைதானத்தினை இலவசமாக வழங்குவதெனவும், விளம்பர ரீதியான போட்டிகளுக்கு நிதி அறவீட்டினை மேற்கொள்வதற்கும் சபை ஏகமனதாக அனுமதி வழங்கியது.

இன்றைய தினம் இடம்பெற்ற மாநகரசபையின் 71வது அமர்வின் போது மேற்படி சிபாரிசானது மாநகரசபையின் விளையாட்டுக் குழுத் தலைவர் து.மதன் அவர்களினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதற்கு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் விளையாட்டுக் குழுத் தலைவரான சுரேஸ் ஆகியோர் ஆதரித்து கருத்துத் தெரிவித்ததுடன் சபையில் ஏகமனதாக அனுமதியும் வழங்கப்பட்டது.

மேற்படி தீர்மானம் சபை இல்லாத காலத்திலும் அமுலாகக் கூடிய விதத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

மேற்படி விளையாட்டுக் குழுவின் சிபாரிசினை சபைத் தீர்மானத்தில் உள்வாங்கி நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இதன்போது முதல்வர் தெரிவத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.