மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது!

அனுமதிப் பத்திரம் இன்றி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (11) நண்பகலில் இடம் பெற்றுள்ளது.

சாவகச்சேரி அறுகுவெளி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, டிப்பர் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சந்தேக நபரை நாளைய தினம் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.