பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குறிதத் பெண்கள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறிகாந்தி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்திலிருந்து பெண்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, பெண்களிற்கான தொழில் சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அதிகரித்த மின்கட்டணம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் நெருக்கடிக்குள்ளாவதாகவும் தெரிவித்த அவர்கள், இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.