யாழில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

டந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம், சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்குக்கும் அதிக மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மிக நூதனமாக இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சிசிடிவி கெமரா உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைதுசெய்வதற்கான  நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.