சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ; இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.6 வீதம்  அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,184 ஆக பதிவாகியுள்ளது. அதற்கமைவாக ஜனவரியில் 102,545 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 719,978 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்தனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை பரிசீலிக்கும் போது அதிக எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து அதிகளவானோர் வருகை தந்துள்ளனர்.

அதன் எண்ணிக்கை 29,084 ஆக பதிவாகியுள்ளது.மேலும்  இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவானோர் நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.