இலங்கை மின்சார சபையை 9 கட்டங்களாக வேறுபடுத்த அரசாங்கம் முயற்சி – மின்சாரத்துறை சேவை சங்கம்

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக பிரித்து,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி, ஆகவே 15 ஆம் திகதி புதன்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மின்சாரத்துறை அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்த வேண்டுமாயின் அதற்கு நாட்டு மக்கள் அனுமதி வழங்க வேண்டும்.மக்களாணையை பெற வேண்டுமாயின் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும்.

மின்சார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை என மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் கருத்துக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

ஏனெனில் அவர் பாராளுமன்றத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார். நாட்டு மக்கள் மத்தியில் பிறிதொன்றை குறிப்பிடுகிறார். எம்மிடம் முற்றிலும் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்.

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக வேறுப்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆகவே இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது.மின்சாரத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி ஆகவே நாளைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.