தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு! நளின் பெர்னாண்டோ

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது இந்த வாரத்தில் நிச்சயம் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை ) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் எனவும் தெரிவி்த்துள்ளார்.

‘இந்த வாரத்தில் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் வணிகங்களுக்காக இந்தப் பொருள்களை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.