பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு.

சாவகச்சேரி
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை vitol அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஊடாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது கோப்பாய், ஊர்காவற்துறை,புங்குடுதீவு,திருநகர்,தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 138குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.