நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம்!

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக யாழ் குடாநாட்டுப் பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் வருகை தரவில்லை.

மேலும், வங்கிகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.