உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பதாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.