வாகனங்களை மீள இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை!

வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.

இதனொரு கட்டமாக, வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது எனவும் அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர், சாந்த கமகேவிடம் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.