யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கினர்.
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மத்தி ரோட்டரி (Rotary) கழகமும்,நலன் விரும்பிகளும் இணைந்து கல்வித் தேவையுடைய மாணவியின் காணிக்குள் தென்னங்கன்றுகள் நாட்டி வழங்கினர்.
கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் இதற்கான நிகழ்வு நேற்று (16) பிற்பகல் இடம் பெற்றது.
இதன்போது, கிளி/முருகானந்தா கல்லூரி மாணவி திருக்கேதீஸ்வரன் கோன்சிகாவின் காணிக்குள் 30 தென்னங்கன்றுகள் நாட்டி வழங்கப்பட்டன.
வாழ்த்துக்கள் சத்தியமூர்த்தி ஐயா! “தங்கள் சேவை எமக்கு எப்போதும் தேவை” தங்கள் சேவை சிறக்க தமிழ் சீ என் என் குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்!
கருத்துக்களேதுமில்லை