டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.


மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் நேற்றைய வீதமான ரூ. 327.20இலிருந்து ரூ. 332.06 ஆகவும், விற்பனை வீதம் ரூ. 346.37 இலிருந்து ரூ. 351.51 சதமாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில், கொள்வனவு வீதம் நேற்றைய விகிதமான ரூ. 332.96 முதல் ரூ. 331.48 சதமாகவும் விற்பனை வீதம் ரூ. 351.50 சதத்திலிருந்து ரூ. 355.00 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனிடையே சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய விலையான ரூ. 330 இலிருந்து ரூ. 335 ஆகவும், விற்பனை விலை ரூ. 345 இலிருந்து ரூ. 350ஆகவும் அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.