சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த ரிட் மனு இன்று (20) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த சுமார் ஒரு கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.