ஹிக்கடுவ இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது

காலி, ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திராணகம பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இருவர் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டீ-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, குறித்த துப்பாக்கி சூட்டினை மேற்கொள்ள 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள களுமுனி ரவிந்து சங்கத சில்வா எனும் பூரூ மூனாவிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது தெரியவந்துள்ளது.

அதற்கமைவாக,  துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதற்காக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, டீ-56 ரக துப்பாக்கி மற்றும் 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்தோடு துப்பாக்கி சூடு மேற்கொள்ள திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் குறித்த பெண் ஹிக்கடுவ, களுப்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய நலாகஸ்தெனிய, ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டு  தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.