‘மொரட்டுவே குடு ரெஜினா’ அதிரடிப்படையினரால் கைது!

வெளிநாடு ஒன்றிலிருந்து இரத்மலானை, கல்கிஸை, மொரட்டுவை பிரதேசங்களுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் இரத்மலானை தேவிந்தவின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் “மொரட்டுவே குடு ரெஜினா” என பிரபலமாக அறியப்படுபவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரட்டுவெல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே 49 வயதுடைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5.25 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.