சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் – இலங்கை வர்த்தக சம்மேளனம்

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தொழில்சங்கங்கள் சிவில் சமூகத்தினர் இலங்கை தொடர்பான சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை சாதகமாக பார்க்கவேண்டும் சீர்திருத்த நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையால் தொடர்ந்தும் மானியத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமையை தொடர்ந்தும் பேணமுடியாது என தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் அரசாங்கம் தான் உறுதியளித்துள்ள சீர்திருத்தங்களிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருளாதாரத்திற்கு இது முக்கியமான தருணம் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் எப்போதோ முன்னெடுத்திருக்கவேண்டிய சீர்திருத்தங்களை முன்னெடுத்தால் அது நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு முக்கியமான ஒரு உந்துதலாக காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.