தேர்தலைப் பிற்போடுவது தொடர்பாக வெளிநாட்டு துதர்களுடன் பேசி;னோம்! லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்
வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் தனித்து சென்று சந்திக்கவில்லை. எங்களுடன் மொட்டு கட்சியில் போட்டியிட்டவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர்.
தேர்தலை பிற்போடுவது தொடர்பாகவே நாங்கள் கலந்துரையாடினோம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பிரதமகொறடா பிரசன்ன ரணதுங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில் –
எதிர்க்கட்சி தலைவர் உட்பட சிலர் வெளிநாட்டு தூதுவர்களை கொழும்பு கிளப்பில் சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடன்் வழங்குவதை நிறுத்த வேண்டும் அல்லது கடும் நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர் என ஊடகவியலாளர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.
அதன் உண்மைத் தன்மை எனக்கு தெரியாது. அதனால் இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.
இதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து பதிலளிக்கையில் –
வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் சந்தித்தோம், ஐக்கிய மக்கள் சக்தியினர் மாத்திரமல்ல, மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் வந்தவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருந்தனர்.
இதன் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டிருப்பது தொடர்பாக நாங்கள் கதைத்தோம். அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் ஐ.சீ.சீ.பீ.ஆர். நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.சீ.சீ.பீ.ஆர் 25 ஆவது சரத்தின் கீழ் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகிறோம். அவ்வாறு கொண்டுவந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பானமையை பெற்றத்தர நாங்கள் தயார் எனவும் நாங்கள் பல தடவைகள் இந்த சபையில் குறிப்பிட்டிருக்கிறோம்.
அத்துடன் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமாக இருந்தால் அதற்கும் நாங்கள் தயார். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை