இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் திடீர் முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் அது வீழ்ச்சியடைந்தது.

ஆனால் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாகக் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது.

அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இது தொடர்ச்சியாக அதிகரித்துவந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.