விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் – பீரிஸ்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையிடுவது குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், உயர் நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை உயர்நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்றத்தில் அதிகாரம் மற்றும் கௌரவம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் நீதித்துறையினதும் கௌரவத்தை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயற்பட தாம் தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை