மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு!
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு! பாடசாலை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் கனகசபை இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாவகச்சேரி கோட்டக்கல்வி பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இராசலட்சுமி மயில்வாகனசிங்கம், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமானஜனிகாந்தன் ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில், தேன் தேடும் நண்பர்கள், சம நிலையில் செல்வோம், வளைந்து நெளிந்து ஓடுவோம், பந்தெறிதல், வேகமாகத் தடை தாண்டல், தாம்பு தாண்டல், கலப்பு ஓட்டம், சமநிலையாக நடப்போம், வேடம் புனைதல், தாங்குதிறன் ஓட்டம், கயிறு இழுத்தல் ஆகிய சிறப்பான விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
விநோத உடை நிகழ்வு, இடைவேளை நிகழ்வு ஆகியன சபையோரைக் கவர்ந்தன
கருத்துக்களேதுமில்லை