கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடம் ஆரம்பமான இந்த நிகழ்வில், தமிழ்த்தாய்க்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழை வளர்க்க அருந்தொண்டாற்றிய திருவள்ளுவர், ஒளவையார் உள்ளிட்டடோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பார்த்தீபன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மேனாள் பள்ளி முதல்வர் எஸ்.பாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.