நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம்

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார்  களப்பயணம் கடந்த சனிக்கிழமை (25) பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

களப்பயணத்தின் போது அரியாலை நீர்நொச்சித் தாழ்வுக் குளம் , பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடனான நீர் சார்ந்த உரையாடல், நல்லூர் லிங்கம் கூழ் பாரில் ஐஸ்கிறீம் தயாரிப்பில் நீரின் பயன்பாடு குறித்தும் , கோண்டாவில் குடிநீர் விநியோக நிலையம், யாழ்.பல்கலைக்கழக கோண்டாவில் மாணவர் விடுதியில் கழிவு நீர் பயன்பாடு போன்றன குறித்தும் ஆய்வுக் களப்பணி இடம்பெற்றது.

இக் கள ஆய்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  WASPAR செயற்றிட்டம் ஊடாக உருவாகிய வடக்கின் நீர் உரையாடல் மன்றம் மற்றும் Young Water Professional North இணைந்து ஒழுங்கமைத்திருந்தன.

குறித்த களப்பயணத்தில் நீர் சார்ந்த துறைமையாளர்கள், மாணவர்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும்  கலந்துகொண்டதுடன் நல்லூர் பிரதேச செயலக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கருத்தாடல் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.