காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது!
காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களில் ஒருவர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் நேற்று(செவ்வாய்கிழமை) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்துக்களேதுமில்லை