ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார்!

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இன்று (31) உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

218 கந்தபாத, மீரியகல்ல, பாதுக்கவைச் சேர்ந்த செம்பக்குட்டி ஆராச்சிலாகே பந்துல (59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வெட்டுக் காயத்துக்கு சிகிச்சை பெற கடந்த 29ஆம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்தச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.