சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பெப்ரவரியில் 170 மில்லியன் டொலர் வருவாய் !!

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பெப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது ஜனவரி மாதத்தை விட 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளே பெப்ரவரி மாதத்தில் அதிகளவில் வந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

இதேநேரம் மார்ச் மாதத்தில் ஏற்கனவே 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.