எதிர்க்கட்சிக் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானம்: அனுரகுமார

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் –

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள், பணத்துக்காக தங்கள் நாடாளுமன்ற ஆசனங்களைத் தியாகம் செய்ய மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தி வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.